பிறந்தநாள் ஸ்பெஷல்.! மகளிர் சுய உதவி குழு மாநாடு.! பிரதமர் மோடி உரை.!
பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மகளிர் சுயஉதவி குழுக்கள் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு , மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மகளிர் குழு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பாக, மத்திய பிரதேசத்தில் நலிவடைந்த குறிப்பிட்ட 4 பிரிவினருக்காக திறன் மேம்பாட்டு மையத்தை நேரடியாக துவங்கி வைத்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற மகளிர் சுயஉதவி குழுக்கள் சார்பாக நடைபெற்ற மாநாட்டில், பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், ‘ இந்த வருட பிறந்தநாளுக்கு என் தாயை நேரில் சந்தித்து ஆசி வாங்க முடியவில்லை. இங்கு லட்சக்கணக்காக பெண்கள் எனக்கு பிறந்தநாள் ஆசி வழங்குகிறார்கள். இதனை கண்டால் என் தாய் மகிழ்ச்சியடைவார்கள்.
70 வருடத்திற்கு பிறகு சிறுத்தை நம் நாட்டிற்கு வந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருந்தது. இப்பொது எப்படி இருக்கிறது. என்றும், நம் ஆட்சி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னேறி வருகிறோம். பஞ்சாயத்து தலைவர் முதல் கணாதிபதி வரையில் நம் நாட்டில் பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
2 கோடி பெண்கள் எஜமானிகள் ஆகியுள்ளனர். பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறு வணிகம் செய்வதற்கு 19 லட்சம் கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளன.’ என தமது ஆட்சி நடவடிக்கைகள் பற்றி பெருமையாக பேசினார் 72 வது பிறந்தநாளை கொண்டாடும் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி.