ஆஸ்திரேலியா ஓபன் கிரண்ட்ஸ்லாம் வென்ற போபண்ணாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி – இத்தாலியின் சைமன் பொலேலி, ஆண்ட்ரியா வவாசூரி ஜோடியுடன் மோதிய நிலையில் போபண்ணா ஜோடி 7-6 (7-0), 7-5 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இரட்டையர் பிரிவில் 43 வயதாகும் போபண்ணா முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து போபண்ணாவை வாழ்த்தி பிரதமர் மோடி தனது தனது அதிகாரபூர்வ ‘X’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் அபார திறமைசாலியான போபண்ணா சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலிய ஓபன் வெற்றிக்கு அவருக்கு வாழ்த்துக்கள்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்..! 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று போபண்ணா சாதனை

எப்பொழுதும் நமது ஆன்மா, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியே நமது திறன்களை வரையறுக்கிறது என்பதை அவரது குறிப்பிடத்தக்க பயணம் நமக்கு மிக அழகாக உணர்த்துகிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்