கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ! நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிட உள்ளார்.
பிரதமரின் கிசான் திட்டம் :
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
அந்தவகையில் பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிட உள்ளார்.அதாவது , 9 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி நிதி உதவி அவர்களைச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் நிகழ்ச்சியின்போது பிரதமர் கலந்துரையாடுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் கிசான் திட்டத்தில் தங்களது அனுபவங்கள் குறித்தும், விவசாய நன்மைக்காக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025