பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா பயணம்
இன்று பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவிற்கு செல்கிறார்.
சவுதி அரேபிய மன்னர் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.அவரது அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியாவிற்கு செல்கிறார்.அங்கு செல்லும் பிரதமர் அந்த நாட்டு மன்னர் முகமது பின் சல்மான் அல் சவுத் (Mohammad Bin Salman Al Saud) உள்ளிட்டோரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையை நடத்த உள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சவுதி அரேபியாவிற்கு செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.