மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் இறந்ததற்கு பிரதமர் மோடி ,காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையின் சிறப்பு பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பிறந்த குழந்தைகள் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த செய்தி வெளியானதும், துயரமடைந்த குடும்பங்களுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நாம் விலை மதிப்பற்ற பிஞ்சு உயிர்களை இழந்துவிட்டோம்.பச்சிளங்குழந்தைகளின் இறப்பு வேதனை அளிக்கிறது.காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று வேண்டுகிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த ராகுல் காந்தி, மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தது கடுமையான துன்பத்தை அளிக்கிறது. உயிரிழந்த குழந்தைகளில் குடும்பத்திற்க்கு தேவையான உதவிகளை மகாராஷ்டிரா அரசு செய்ய வேண்டும்என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…