புதுச்சேரியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி இன்று பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி ,திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். திட்டங்கள் மற்றும் அடிக்கல் நாட்டிய விவரங்கள் இதோ.
புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் – நாகப்பட்டினம் வரையிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி கட்டிடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு துறைமுகம் உருவாக்குவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில், தடகள வீரர்களுக்கான சிந்தடிக் ஓடு தளத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். புதுச்சேரி ஜிப்மெர் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த மையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். புதுச்சேரி லாஸ்பேட்டையில் 100 படுக்கைகள் கொண்ட மாணவிகள் விடுதியையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…