Breaking News: விண்வெளியில் இந்தியா புதிய சாதனை,3 நிமிடத்தில் செயற்கைக்கோளை தாக்கிய மிஷன் சக்தி
விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களை முன்னிறுத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக தெரிவித்தார்.
அதில் தொலைக்காட்சி ,ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக உரையாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் நாட்டு மக்களிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 -ஆம் தேதி பிரதமர் நரேந்திர பண மதிப்பிழப்பு முறையை அமல்படுத்த உரையாற்றியது போல எதுவும் உரை வரும் என்று அச்சத்தில் ஆழ்ந்து இருந்தனர்.
மேலும் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது.அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது.விண்வெளிதுறையில் இந்தியா 4வதுநாடாக இந்தியா உருவெடுத்த உள்ளது.
நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்ததாக தெரிவித்துள்ளார் .அதேபோல் பூமியை நேரடியாக கண்காணிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
செயற்கைகோள் ஏவுகணை ஏ-சாட்டை இந்தியா சோதித்துள்ளனர் .இந்தியாவின் செயற்கை கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல என்று அவரது உரையில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் சொல்ல வேண்டிய தகவலை பிரதமர் நரேந்திர மோடி சொல்வது சரியா,இதற்கு தேர்தல் ஆணையத்தின் விதி அமலில் இல்லையா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.