பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரை

Default Image

பிரதமர் நரேந்திர மோடி இன்று  நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 75-ஆண்டு பொதுச் சபையில் (யுஎன்ஜிஏ) உரையாற்றவுள்ளார்.

கடந்த 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைக்கப்பட்டது. ஐ.நா.வின் முக்கிய நோக்கம் உலக நாடுகளுக்கிடையே அமைதி, நல்லுறவு, பாதுகாப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதே ஆகும்.

இந்த கூட்டம் நியூயார்க்கில் நடைபெறுகிறது.கொரோனா காரணமாக  தலைவர்கள் பங்கேற்க முடியாத நிலையில் இந்த கூட்டம் மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. அதாவது உறுப்பு நாடுகளின் தலைவர்களின்  உரையை  முன்கூட்டியே  வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.இந்த  வீடியோ கூட்டத்தில் ஒளிப்பரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஒவ்வொரு நாட்டின் தலைவர்களின் வீடியோக்களும் 15 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது ஐக்கிய நாடுகள் சபை.

 இந்தியாவின் முன்னுரிமைகள் குறித்து பிரதமர் மோடி கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் அவர் எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என்றும்  பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை வலுப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உதவி வழங்குவதன் மூலம்  கொரோனா நோய்க்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்புக்கு இந்தியாவின் பங்களிப்பை பிரதமர் எடுத்துரைக்க வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்