பிரதமர் மோடியின் பேச்சு திருப்தியளிக்கவில்லை – ராகுல்

Default Image

தொழிலதிபர் அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

பிரதமர் மோடி உரை:

pmmodiparliamnet

டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குடியரசு தலைவரின் உரை வழிகாட்டியாக இருக்கிறது. தொலைநோக்கு சிந்தனையுடனான உரையை ஜனாதிபதி வழங்கினார்.

ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி மறைமுக தாக்கு:

pm rahul

நாடாளுமன்றத்தில் சிலர் பேசியதை கூர்ந்து கேட்ட போது அவர்களுக்கு புரிதல் திறன் குறைவாக உள்ளது என்பதை காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் தங்களது மனதில் உள்ளதை தான் செயலாக வெளிப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத்தலைவர் குடியரசு தலைவரை அவமானம் செய்தார். எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி உரையை குறிப்பிடவே இல்லை. காங்கிரஸ் கட்சியினர் செய்த வினை அவர்களை சுடும் என தெரிவித்த பிரதமர் ஊழல், வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசினார்.

அதானி குறித்த குற்றாசாட்டுக்கு பதிலளிக்கவில்லை:

adanii

பிரதமர் உரையின்போது, அதானி குழும விவகாரம்- நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். பிரதமர் தனது உரையில் ஒரு இடத்தில் கூட அனைவரும் எதிர்பார்த்த அதானி குறித்த குற்றாசாட்டுக்கு பதிலளிக்கவில்லை. பிரதமர் உரையை முடிக்கும் போதும் ராகுல்காந்தி உள்ளிட்டோர் அதானி.. அதானி.. என்று முழக்கமிட்டனர்.

ராகுல் காந்தி குற்றசாட்டு:

rahuladanipm

இந்த நிலையில்,  குடியரசு தலைவர்  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பிரதமர் மோடி பேச்சு திருப்தி அளிக்கவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதானி தனது நண்பர் இலையெனில் அவர் மீது விசாரணை நடத்தப்படும் என பிரதமர் கூறியிருக்க வேண்டும் என்றும் தொழிலதிபர் அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அதானி விவகாரம் குறித்து தான் எழுப்பிய கேள்விக்கும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என மக்களவை கூட்டம் முடிந்து வெளியே வந்த  ராகுல் காந்தி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். இதனிடையே, நேற்று Adani – Modi Relationship புகைப்படத்தை காட்டி 4 கேள்விகளை அடுக்கினார் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்