LIVE UPDATE: கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி உரை.!

Default Image
  • கடந்த 2 மாதங்களாக கொரோனா குறித்த அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம். இதனால் நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கிறது. 
  • கொரோனா வைரஸ் உலக போர் போல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் உலகம் கொரோனாவை கண்டு பீதியடைந்து வருகிறது என தெரிவித்தார்.
  • கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அறிவியல் நமக்கு இதுவரை உதவவில்லை, உலக முழுவதும் தொற்று வேகமாக பரவி வருகிறது.
  • அடுத்த சில வாரங்களுக்கு உங்கள் நேரம் எனக்கு வேண்டும் என்றும்
    கொரோனா பாதித்த நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. 
  • நாட்டின் நன்மைக்காக வரும் 22ஆம் தேதி ஊரடங்கை நாம் பின்பற்றுவோம், இதனை அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள்  மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும். 
  • வரும் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிற்றுக்கிழமை வெளியே வரவேண்டாம் என மோடி அறிவுறுத்தியுள்ளார். 
  • 22 ம் தேதி கொரோனா வைரஸுக்கு எதிராக சோதனை ஓட்டமாக இருக்கும். அன்று மாலை 5 மணிக்கு வீட்டின் வாயிலில் இருந்து அனைவரும் கைதட்டியோ அல்லது மணியோசை எழுப்பியோ மருத்துவர்களுக்கும், சேவை பணிபுரிவோருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். 
  • கொரோனா இந்தியாவை பாதிக்காது என்று நினைப்பது தவறு, இந்தியாவில் 130 கோடி மக்கள் கொரோனாவை எதிர்க்க போர் தொடுக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் இந்த சுழலில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
  • போலீஸ், ரயில்வே துறை, ஆட்டோ ஓட்டுநர் பலர் பொதுசேவை செய்கிறார்கள் அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். 
  • போர்க்காலங்களில் இரவு நேரங்களில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
06.11.2024 Power Cut Details
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin
yellow alert rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar
Bengaluru