பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் “இது ஒரு பேரழிவு”.! ராகுல் காந்தி குற்றசாட்டு.!

பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா - சீனா எல்லை விவகாரம் என்பது "ஒரு பேரழிவு" என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Congress MP Rahul Gandhi - PM Modi

அமெரிக்கா : காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தற்போது அமெரிக்க பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இவர் வாஷிங்டன்னில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (செவ்வாய்) பேட்டியளித்து இருந்தார். அப்போது இந்திய அரசியல் விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார்.

இந்தியா – சீனா விவகாரம் :

அப்போது இந்தியா – சீனா எல்லை பிரச்சனை குறித்து பேசிய ராகுல் காந்தி , இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக்கில் 4,000 சதுர கிலோமீட்டர் அளவு பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இதனை ஒரு பேரழிவாக நான் கருதுகிறேன்.

உங்கள் நாட்டில் 4000 சதுர கிலோமீட்டர் பரப்பை அண்டை நாடு ஆக்கிரமித்தால் அமெரிக்கா என்ன செய்யும்.? எந்த நாட்டின் ஜனாதிபதி (அ) தலைவராவது இதனை சரியாக தான் செய்தோம் என சொல்லிவிட்டு தப்பிக்க முடியுமா? பிரதமர் மோடி, இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை. ” என்று கூறினார்.

வங்கதேச விவகாரம் :

அடுத்து வங்கதேச விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசுகையில், ” வங்காளதேசத்தில் அந்நாட்டிற்கு எதிராக செயல்படும் குழுக்கள் குறித்து இந்தியா கவலை கொள்கிறது. இருப்பினும், வங்கதேசத்தில் நிலைமை சரியாகிவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். வங்கதேச நிலவரம் குறித்து அந்நாட்டவர்களும் எங்களிடம் பேசினார்கள்.

இஸ்ரேல் போர் :

நாங்கள் எந்த வகையான வன்முறைக்கும் எதிரானவர்கள். மேலும் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வெளிப்படையாக பார்த்தல், அந்நாட்டில் அமைதியை நிலைநிறுத்துவது அந்நாட்டு அரசாங்கத்தின் பொறுப்பு. அதை விரைவில் செயல்படுத்த வேண்டும். எங்கள் தரப்பில் இருந்து, வன்முறையை நிறுத்துவதற்கு தேவையான முயற்சியை நாங்கள் முன்னெடுத்து வருவோம்.” என்று கூறினார்.

அடுத்து. இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதல் பற்றி கூறுகையில், ” அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் நடந்தது முற்றிலும் தவறு , கண்டிக்கத்தக்கது. ஆனால், இஸ்ரேல் பதிலுக்கு செய்தது மற்றும் செய்து கொண்டிருப்பது, அப்பாவி பொதுமக்கள் மீது குண்டுவீசி தாக்குவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழப்பது முற்றிலும் தவறானது. அதைத் தொடர அனுமதிக்கக் கூடாது. எந்த விதமான வன்முறைக்கும் நான் எதிரானவன். இந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு உதவுவது என்பது காசா நகரத்து மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நான் நினைக்கிறேன். ” என்று ராகுல் காந்தி கூறினார் .

இந்தியா – அமெரிக்க உறவு :

இந்தியா – அமெரிக்க உறவு பற்றி ராகுல் காந்தி பேசுகையில் , ” இந்தியா-அமெரிக்க உறவு என்பது இரு நாடுகளுக்கும் முக்கியமானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம் இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை. இந்திய உள்நாட்டு பிரச்சனை என்பது எங்கள் பிரச்சனை. அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். இந்திய ஜனநாயகம் பாதுகாப்பாக இருப்பதை நாங்களே உறுதி செய்வோம்.” என்று ராகுல் காந்தி வாஷிங்டன்னில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்