டெல்லியில் புதிய திறக்கப்பட்ட கட்டடத்தில் டிரோன் இயக்கிய பிரதமர் மோடி.! வைரலாக வீடியோ.!

பிரதமர் மோடி நேற்று டெல்லில் திறக்கப்பட்ட புதிய கண்காட்சி , மாநாட்டு அரங்கில் ட்ரான் இயக்கினார்.
டெல்லியில் பிரகதி மைதானத்தில் 123 ஏக்கர் பரப்பளவில் 2,700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தை இன்று பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த புதிய கட்டடத்தில் உலகெங்கிலும் உள்ள சிறந்த கண்காட்சி மற்றும் மாநாட்டு வளாகங்கள் அமைந்துள்ளது.
இதில், புதிய மாநாட்டு மையம், கண்காட்சி அரங்குகள், வட்ட வடிவில் திறந்தவெளி அரங்குகள் போன்ற பல அரங்குகள் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது நேற்று இந்த புதிய கட்டடத்தை திறந்து வைத்துவிட்டு, விழா இறுதியில் சிவப்பு துணியில் பாரத் மண்டபம் என எழுதப்பட்ட (இந்தியில்) எழுதப்பட்ட பறக்கும் ட்ரோனையும் பிரதமர் இயக்கினார். பிரதமர் மோடி இயக்கிய ட்ரான் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிரது.
#WATCH | PM Narendra Modi inaugurates new ITPO complex ‘Bharat Mandapam’ in Delhi pic.twitter.com/igBT229O5U
— ANI (@ANI) July 26, 2023