பிரதமர் மோடி மயில்களுடன் பிசி.! நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி ட்வீட்
பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றசாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி சில வாரங்களுக்கு முன்பு மயில்களுடன் இருப்பது போல எடுக்கப்பட்ட போட்டோக்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தன. இந்த படங்களை பாஜகவினர் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டிருந்தனர். இந்த பதிவிற்கு பலரும் எதிர்ப்பாகவும் பதிவிட்டனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இந்த வாரம் 50 லட்சத்தை கடந்துவிடும் என்றும் திட்டமிடப்படாத பொதுமுடக்கம் என்பது ஒருநபரின் ஈகோவின் விளைவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தான் கொரோனா நாடு முழுவதும் பரவுகிறது. பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
कोरोना संक्रमण के आँकड़े इस हफ़्ते 50 लाख और ऐक्टिव केस 10 लाख पार हो जाएँगे।
अनियोजित लॉकडाउन एक व्यक्ति के अहंकार की देन है जिससे कोरोना देशभर में फैल गया।
मोदी सरकार ने कहा आत्मनिर्भर बनिए यानि अपनी जान ख़ुद ही बचा लीजिए क्योंकि PM मोर के साथ व्यस्त हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) September 14, 2020