“அனைவருக்கும் மகிழ்ச்சியான, தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” – பிரதமர் மோடி பதிவு.!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என கூறி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்.

NarendraModi -Thaipoosam

சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. இதையொட்டி, ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பலதண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் மோடி “அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசம் வாழ்த்துகள் என்று” தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது பதிவில், “முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயலூக்கத்தையும் கொண்டுவரட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்