பிரதமர் மோடி 3.O.! முதல் வெளிநாட்டு பயண விவரம் இதோ…
டெல்லி: பிரதமர் மோடி வரும் ஜூலை 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு செல்ல உள்ளர்.
பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது வழக்கம். கடந்த 10 ஆண்டுகால ஆட்சி காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பன்னாட்டு நட்புறவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
அதே போல, தற்போது 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தற்போதுள்ள அரசின் கீழ் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள உள்ளார். ரஷ்யா – இந்தியா நல்லுறவை மேம்படுத்தும் வண்ணம் 22வது இருநாட்டு சந்திப்பிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அழைப்பின் பெயரில் வரும் ஜூலை 8 மற்றும் 9ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் அரசு முறை நிகழ்வுக்காக அங்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது இந்தியா – ரஷ்யா இடையேயான நல்லுறவு மேம்படுத்தும் வகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்து 10ஆம் தேதி ஆஸ்திரியா நாட்டிற்கும் செல்ல உள்ளார் என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார்.