ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.! சீனா மற்றும் ரஷ்யா அதிபர்களை நேரில் சந்தித்து ஆலேசனை.!
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்.சி.ஓ அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.
இந்த உறுப்பு நாடுகள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடைசியாக 2019இல் நடைபெற்றது. கொரோனா காலகட்டத்தில் இந்த சந்திப்பு ஒரே இடத்தில் நடைபெறவில்லை. தற்போது மேற்கண்ட நாட்டு தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டில் சமர்காண்டில் நடைபெறுகிறது.
இதற்ககா தனி விமானம் மூலம் பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றிருந்தார். அவருக்கு உரிய வரவேற்பு கொடுக்கப்பட்டு மாநாட்டிற்கு கூட்டி செல்லப்பட்டார்.
அதே போல, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜிஜிங்பிங், மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரும் நேரில் கலந்து கொண்டனர்.
2020 கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, முதல் முறையாக சீன அதிபரை நேரில் சந்தித்து பேச உள்ளார் பிரதமர் மோடி. அதே போல, உக்ரைன் – ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளுக்கு பிறகு ரஷ்ய அதிபரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.