ஒடிசா – அசாம் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் – நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

pm modi

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் அனைத்து மாநில கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என்றும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தேர்தலுக்கான பணிகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஒடிசா – அசாம் மாநிலங்களுக்கு இன்றும், நாளையும் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, இன்று ஒடிசா மாநிலம் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, பிற்பகல் 2.15 மணிக்கு சம்பல்பூரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் ரூ.68,000 கோடிக்கு மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

முதலமைச்சரை விட ஆளுநர் அதிகாரம் படைத்தவரா.? திமுக எம்பி தாக்கல் செய்த தனிநபர் மசோதா.!

இதுபோன்று, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அந்தவகையில், எரிசக்தித் துறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், சுமார் ரூ.2146 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.

இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அசாம் மாநிலம் செல்கிறார். அதன்படி, அசாம் மாநிலத்தில் நாளை காலை 11:30 மணியளவில், கவுகாத்தியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ .11,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டவுள்ளார்.

அதே சமயத்தில் தெற்காசிய துணை மண்டல பொருளாதார ஒத்துழைப்பு வழித்தட இணைப்பின் ஒரு பகுதியாக 38 பாலங்கள் உட்பட 43 சாலைகள் மேம்படுத்தப்படும் ரூ.3,400 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பிரதமர் நரேந்தர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்