பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார்.
வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், நேற்று மாலை 6.30 மணியளவில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த புயலால் 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள், வீடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன.
மேலும், கொல்கத்தா விமான நிலையமே நீரில் மூழ்கியதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள் சேதமடைந்துள்ளதாக விமான நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது. இந்த புயலால் 72 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்தார்.
இதையடுத்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…