6.1 லட்சம் பயனாளிகளுக்கு, ரூ.2,691 கோடி – நிதியுதவியை விடுவித்தார் பிரதமர் மோடி
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ரூ.2,691 கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார்.
கிராமப்புறங்களுக்கான, பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ஏற்கனவே, முதல் தவணைத் தொகையை பெற்ற 80 ஆயிரம் பயனாளிகளுக்கான இரண்டாவது தவணைத் தொகை, 5.30 லட்சம் பயனாளிகளுக்கான முதல் தவணைத் தொகை ஆகியவை, தற்போது விடுவித்து உள்ள நிதியுதவியில் அடங்கும். கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6.1 லட்சம் பயனாளிகளுக்கு, ரூ.2,691 கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில்,உங்கள் அனைவருக்கும், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் விரைவில் உங்கள் சொந்த வீடு, கனவு இல்லத்தைப் பெறப் போகிறீர்கள்.இன்று 6 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் பணத்தைப் பெற்றுள்ளன.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் கட்டணத்தையும், 80,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீட்டிற்கான இரண்டாவது தவணையையும் பெற்றுள்ளனர் என்று பேசியுள்ளார்.