இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!!
இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பராக்ரம் திவாஸ் அன்று (ஜனவரி 23) நேதாஜியின் ஹாலோகிராம் சிலை திறக்கப்பட்ட அதே இடத்தில், பிரதமரால் திறக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை நிறுவப்படும்.
நேதாஜியின் பிரமாண்ட சிலை 280 மெட்ரிக் டன் எடையுள்ள கிரானைட் கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி இந்த சிலை முற்றிலும் கையால் செதுக்கப்பட்டுள்ளது. அருண் யோகிராஜ் தலைமையில் சிலை அமைக்கும் சிற்பிகள் குழு அமைக்கப்பட்டது.