எனது நண்பர் அபே ஷின்சோ சுடப்பட்டது வேதனை அளிக்கிறது.! பிரதமர் மோடி வருத்தம்..
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதை அறிந்து டிவிட்டரில் பிரதமர் மோடி வருத்தத்தை தெரிவித்தார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் திறந்த வெளியில் உரையாற்றும் போது, 41 வயது மதிக்க தக்க ஒரு நபரால் திடீரென சுடப்பட்டார். இதில் அவர் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து இணையத்தில் ஷின்சோ அபே சுடப்பட்ட திக் திக் வீடியோ வெளியாகி உள்ளது. அதனை ஜப்பானிய ஊடகங்கள் முதல் இந்திய ஊடகங்கள் வரையில் பல்வேறு நாட்டில் ஒளிபரப்பாகி வருகிறது.
இவர் சுடப்பட்ட நிகழ்வை அறிந்த பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அப்படி நம் நாட்டு பிரதமர் நரேந்திர மோடியும் தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
அதில், ‘எனது நண்பர் ஷின்சோ அபே சுடப்பட்ட செய்தி என்னை வருத்தமடைய செய்தது.எவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
Deeply distressed by the attack on my dear friend Abe Shinzo. Our thoughts and prayers are with him, his family, and the people of Japan.
— Narendra Modi (@narendramodi) July 8, 2022