தியாகிகள் தினத்தை முன்னிட்டு, மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி.!
தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினமான இன்று டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஷஹீத் திவாஸ் என்றும் அழைக்கப்படும் தியாகிகள் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 அன்று, நாட்டில் தேச சேவையில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா ஆகியோரும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக இன்று, பிரதமர் நரேந்திர மோடி தேசத்திற்கான போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்தார். அவர் கூறும்போது, நமது தேசத்திற்காக உயிர்கொடுத்தவர்களின் தியாகங்கள், நமது இந்தியாவிற்கு மேலும் உறுதியை வலுப்படுத்தும் என்று மோடி கூறினார்.
நான் பாப்புவின்(காந்தி) நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன், அவருடைய ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன். நமது தேசத்தின் சேவையில் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படாது. மேலும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க உழைக்க வேண்டும் என்ற எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூறும்போது காந்தியின் நினைவு தினத்தில், அவரது தூய்மை, நாட்டுப்பற்று மற்றும் சுயமொழி போன்ற கருத்துக்களை அம்ரித் காலில் ஏற்றுக்கொள்வது காந்திஜிக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று ஷா கூறினார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவர் காட்டிய பாதை இன்றும் உலக அமைதிக்கு ஏற்றதாக இருக்கிறது என்று கூறினார்.