அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இந்தியா வந்தடைந்தார் பிரதமர் மோடி. இவருக்கு நேற்று டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை ஐஐடி கல்லூரியில் நடைபெறும் 56 ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம் அளிக்க பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து கிண்டிக்கு காலை 9 மணியளவில் வர உள்ளார்.
மேலும், அங்கு நடைபெற உள்ள இந்தியா சிங்கப்பூர் ஹேகத்தான் 2019 என்ற கண்காட்சியை காண்பதற்காக வருகிறார். இதில், புதிதாக தொழில் தொடங்க உள்ளவர்கள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.
அதன் பிறகு 11 மணியளவில் ஐஐடி மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மதியம் 12.45க்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்படுகிறார் பிரதமர் மோடி.
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…
கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது…
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…