ராமானுஜரின் 216 அடி உயர சிலையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் ஐதராபாத்தில் ICRISAT இன் 50 வது ஆண்டு விழாவைத் தொடங்கவும், 11-ஆம் நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவரும், வைஷ்ணவ குருமாருமான ராமானுஜரின் 216 அடி உயர சிலையைத் திறந்து வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் ஹைதராபாத் செல்கிறார். ஐதராபாத்தில் உள்ள மதியம் 2:45 மணியளவில் பிரதமர் மோடி ICRISAT இன் 50வது ஆண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, மாலை 5 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள 11-ஆம் நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவரும், வைஷ்ணவ குருமாருமான ராமானுஜரின் 216 அடி உயர சிலையைத் திறந்து வைக்கிறார்.
216 அடி உயர சிலை 11 ஆம் நூற்றாண்டின் ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் நம்பிக்கை, சாதி மற்றும் சமயம் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சமத்துவம் என்ற கருத்தை ஊக்குவித்தார்.
தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவையில் ராமானுஜாச்சாரியாரின் சிலை உருவாகியுள்ளது. இது உலகின் மிக உயரமான உலோக சிலைகளில் ஒன்றாக உள்ளது.