பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதியுதவி.!

வருகின்ற 25 ஆம் தேதி 9 கோடி விவசாயிகள் பலனடையும் வகையில் 18,000 கோடி ரூபாய் நிதிஉதவி திட்டத்தை துவக்கிவைக்கிறார் பிரதமர் மோடி.
பிரதமரின் கிசான் திட்டம் :
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
நிதி உதவி :
அந்தவகையில் பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிட உள்ளார். அதாவது , 9 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி நிதி உதவி அவர்களைச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் போது 6 வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் உரையாடுவார். விவசாயிகள் தங்கள் அனுபவங்களை பிரதமர்-கிசானுடனும், விவசாயிகளின் நலனுக்காக அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளிலும் பகிர்ந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் கலந்து கொள்வார்.
போராட்டம்:
சமீபத்தில் மோடி அரசாங்கத்தால் இயற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்கள் நடத்திய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த திட்டம் வந்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், நவம்பர் 26 முதல், டெல்லி-அம்பாலா, டெல்லி-ஹிசார், டெல்லி-காஜியாபாத் மற்றும் டெல்லி-நொய்டா வழித்தடங்களில் முறையே சிங்கு, திக்ரி, காசிப்பூர் மற்றும் சில்லா ஆகிய இடங்களில் உள்ள டெல்லியின் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025