கொரோனா குறித்து 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்தந்த மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.குறிப்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழகம், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் பாதிப்பு அதிகளவு உள்ள மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ( காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார். அப்போது அந்தந்த மாநிலங்களில் மேற்கொள்ளப் பட்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்வார் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…
சென்னை : கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில்…
சென்னை : இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்து…
சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன.…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம்…