விவசாயிகளுக்கு நாளை ரூ.19,500 கோடி விடுவிக்கிறார் பிரதமர் மோடி!!
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் நாளை 9.75 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி விடுவிக்கிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியால் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி (பிஎம் – கிசான்) தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று தவணைகளில் தலா ரூ.2000 என வருடத்துக்கு ரூ.6000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 அளிக்கும் திட்டத்தின் கீழ் அடுத்தத் தவணை நிதியை நாளை பிரதமர் விடுவிக்கிறார்.
இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1.38 லட்சம் கோடி நிதி விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை, பிரதமர் நாளை பிற்பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக விடுவிக்கவிருக்க உள்ளார். அதன்படி, 9.75 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.