விவசாயிகளுக்காக ரூ. 17,000 கோடியை விடுவிக்கும் பிரதமர் மோடி.!
கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி பிரதமர் கிசான் உதவித் திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. 4 மாதங்களுக்கு ஒருமுறை மூன்று தவணைகளாக ரூ.2,000 என ரூ.6,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிரதம மந்திரி கிசானின் ஆறாவது தவணைக்காக சுமார் 10 கோடி விவசாயிகள் காத்திருக்கிறார்கள் எனவும் அடுத்த தவணை சில நாட்களுக்குள் வரும் இதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது என கூறிய நிலையில், நேற்று பிரதமர் அலுவலகம் அறிவிப்பு ஒன்றை அறிவித்தது.
அதில், இன்று பிரதமர் 6 வது தவணைக்கு ரூ .17,000 கோடி நிதியை 8.5 கோடி விவசாயிகளுக்கு விடுவிக்கப்படுகிறது எனவும், வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ .1 லட்சம் கோடி நிதி வசதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
டிசம்பர் 1, 2018 அன்று தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் மூலம் 9.9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ .75,000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.