முன்னாள் பிரதமர் குறித்த இந்நாள் பிரதமரின் கருத்துக்கு டெல்லி பல்கலை பேராசிரியர்கள் கடும் கண்டனம் …!!! கூட்டாக கடிதம் …!!!
நமது நாட்டின் முன்னால் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து தற்போதைய பாரத பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த 200 பேராசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்தியாவின் அதிக மக்களவை தொகுதியுள்ள மாநிலம் உத்திரபிரதேசம்.இந்த உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சேனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் உத்தரபிரதேசம் மாநிலத்தில் தான் உள்ளது.
இதில் தற்போது ஐந்து கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக மே 12 மற்றும் மே19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது.இதனால் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது உரையாற்றிய பாரத பிரதமர் மோடி அவர்கள் கூறியதாவது ,‘ராஜீவ் காந்தி ‘மிஸ்டர் கிளீன்’ என காங்கிரஸ் கட்சியினரால் போற்றப்பட்டார். ஆனால் கடைசி காலத்தில் அவருடைய வாழ்க்கை ‘நம்பர்1’ ஊழல்வாதியாகத்தான் முடிவடைந்தது’ என சற்று காட்டமாக கூறினார்.
பார்த பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில்,முன்னாள் பரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சு அவரது கண்ணியத்தை குறைக்கும் செயல் என டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த 200 பேராசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அந்த அறிக்கையில் ‘பொய்யான மற்றும் கண்ணியத்தை குறைக்கும் கருத்துக்கள் மூலம் பிரதமர் அலுவலகத்தின் கவுரவத்தை குறைக்கும் செயல்,” என்று பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கண்டனம் தொடர்பான கடிதம் வெளியானதும்,அதில் நாங்கள் கையெழுத்திடவில்லை என டெல்லி கேஎம்சி கல்லூரியின் பேராசிரியர்கள் மனோஜ் மற்றும் விஜிகா மறுப்பு ஆகியோர் தெரிவித்துள்ளாக செய்திகள் வெளியானது.இதேபோல்,மேரி கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் ரிச்சா ராய் கூறுகையில், “அந்த கடிதத்திற்கு நானும் தான் ஆதரவுதான் கொடுத்தேன். இது ஒரு உண்மையான கடிதம், அதில் கையெப்பம் இடவில்லை என இரு பேராசிரியர்கள் மறுப்பதற்கான காரணம் எனக்கு தற்போது வரை தெரியவில்லை. மற்றவர்கள் அதை மறுக்கமாட்டார்கள் என நம்புகிறேன்,” எனக் கூறியுள்ளார்.இந்த விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் ஒரு புயலை கிளப்பியுள்ளது.