இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

Default Image

பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுடன் காணொளி காட்சி வழியாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுடன் இன்று காணொளிக் காட்சி வழியாக முக்கியமான ஆலோசனை ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து மற்றும் இந்தியா உயர்மட்ட அளவிலான நட்புறவை கொண்டுள்ளதாகவும், உயர்மட்ட அளவிலான முக்கிய விஷயங்களை சீராக பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் பல்வேறு துறைகளில் அவை அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து விரிவாக்கம் அடையவும் வலுப்படவும் ஏற்ற வழியை ஏற்படுத்தும் வகையில் ஒரு விரிவான திட்ட அறிக்கை 2030 ல் வெளியிடப்படும் எனவும், இதில் மக்கள் ஒருவருக்கொரவர் தொடர்புபடுத்திக் கொள்ளுதல் வர்த்தக மற்றும் வளம் ராணுவம் மற்றும் பாதுகாப்பு பருவநிலை செயல்பாடு மற்றும் சுகாதாரம் ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் இடம்பெறும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்