நாளை காலை பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.!
நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக கடந்த 17 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 31 வரை நான்காவது கட்ட நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டங்களாக வெளியிட்டார்.
இந்நிலையில், டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப்பணி குறித்து இந்த அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்றும் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது பற்றி அமைச்சரவையில் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.