இன்று மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்.!
பிரதமர் மோடி டெல்லி இல்லத்தில் இன்று மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரக கூட்டம் நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் அறிவித்த அறிவுப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50 கோடி வரை முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு சிறு தொழில்களுக்கான சலுகைகள் கிடைக்கும் என்றும் ரூ.250 கோடி வரை வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கும் சிறு தொழில்களுக்கும் சலுகைகள் பொருந்தும் என்று தெரிவித்துள்ளனர். ரூ.20,000 கோடி நிவாரணம் மூலம் 2 லட்சம் சிறு, குறு தொழில்முனைவோர் பயனடைவர் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையடுத்து, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவியில் 7% வரை வட்டி தள்ளுபடி என்றும் கடனுதவி வழங்குவதன் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவர். விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் 14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு என்றும் பல்வேறு பயிர்களுக்கான கொள்முதல் விலை 50 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.