அரசியல் கட்சி தலைவர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.பின்னர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து கொரோனா குறித்து நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.இதற்காக பிரதமர் மோடி நாட்டில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.