#Breaking: உச்சத்தில் கொரோனா.. அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
கொரோனா தொற்று நாடு முழுக்க மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 8-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் முதல் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. மேலும் இந்தியாவில் இன்று ஒருநாள் பாதிப்பு முதல் முறையாக 1 லட்சத்தை கடந்தது. கொரோனா தொற்று நாடு முழுக்க மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 8-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.