அரிதான இந்திய கலைப்பொருட்களை திரும்ப கொடுத்ததற்கு நன்றி- பிரதமர் மோடி.!
புராதான மற்றும் அரிதான 100க்கும் அதிகமான கலைப்பொருட்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பித்தந்த அமெரிக்காவுக்கு பிரதமர் நன்றி.
இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட புராதான கலைப்பொருட்களை மீண்டும் இந்தியா வசம் திருப்பித்தந்த அமெரிக்க அரசுக்கு பிரதமர் மோடி, “மான் கி பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சியின் மூலம் நன்றி தெரிவித்து பேசியுள்ளார். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று மனதின் குரல் நிகழ்ச்சியின் 103 ஆவது எபிசோடில் பிரதமர் மோடி, இன்று உரையாற்றினார்.
Several artefacts have been brought back to India. #MannKiBaat pic.twitter.com/M2FjdmbeTK
— PMO India (@PMOIndia) July 30, 2023
அமெரிக்க அரசு திருப்பி கொடுத்துள்ள 105 பாரம்பரிய, புராதான மற்றும் அரிதான கலைப்பொருட்களுக்காக ஒவ்வொரு இந்தியரும் தற்போது மகிழ்ச்சி அடைவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த கலைப்பொருட்கள் ஒவ்வொன்றும் 250 இலிருந்து 2500 ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.