உக்ரைன் செல்கிறார் மோடி : போர் விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை?

PM Narendra Modi will visit Ukraine

டெல்லி : ரஷ்யாவுடனான போருக்குப் பின்னர், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக உக்ரைன் செல்கிறார்.

ரஷியா – உக்ரைன் போர் தொடங்கியதற்குப் பின்னர், முதல் முறையாக அரசு முறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் நாட்டிற்கு செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனிடையே, 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாதம் ரஷ்யா சென்றார்.

பிரதமர் பொறுப்பேற்ற பின்னர், பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் ரஷ்யா என்பதால் அந்தப் பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. அங்கு பிரதமர் மோடிக்கு, ரஷ்யாவின் மிக உயரிய விருதை வழங்கினார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

இதன் பின்னர், இருவரும் கட்டியணைத்து அன்பைப் பரிமாறிக் கொண்டனர். இதனை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், நாளை (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அதன்பின்னர் வரும் 23-ஆம் தேதி போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளுக்கு செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

30 ஆண்டுகளுக்குப் பின் உக்ரைன் செல்லும் முதல் பிரதமர், நரேந்திர மோடி என்றும், 45 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் மிக முக்கியமானதாக இருக்கும். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தையை இந்தியா எப்போதும் பரிந்துரைக்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்