இன்று 70,000 பேருக்கு மத்திய அரசு பணி.! பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.!
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், அடுத்த கட்டமாக 70,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார். இந்த திட்டத்தின் கீழ் அரசு துறைகளில் 10,00,000 பேருக்கு வேலை வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த திட்டத்தின் கீழ், 4,30,000 நபர்களுக்கு பணி நியமனக் ஆணையை வழங்கியுள்ளார்
இன்று காலை 10:30 மணி அளவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், நாடு முழுவதும் 44 இடங்களில் ஒரே நேரத்தில் 70,000 பேருக்கு காணொளி மூலம் இந்த பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்க இருக்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி, 10 லட்சம் அரசு பணி ஆணை வழங்கும் திடமான ‘ரோஸ்கர் மேளா’வின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். இந்த நியமனங்கள் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகள் முழுவதும் வழங்கப்படுகின்றன.
அதன்படி, மோடி வழங்கவிருக்கும் பணிகளின் அடிப்படையில், நிதிச் சேவைத் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த் துறை, சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேருவார்கள்.