எல்லா வீட்டுக்கும் கியாஸ் சிலிண்டர் இணைப்பு.! பாஜகவால் சாத்தியம்.! பிரதமர் மோடி பெருமிதம்.!
நமது அரசு 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டு தேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. எல்லா வீடுகளுக்கும் கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கியுள்ளோம் – என இமாச்சல பிரதேசத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பெருமிதம்.
இந்தியாவில் 4வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று இமாச்சல பிரதேசத்தில் தொடங்கி வைத்தார். மேலும், ஹிமாச்சல் உனாவில் பூங்கா மற்றும் புதிய ஐஐடி ஆகியவை அமைப்பதற்கான அடிக்கல் நட்டு வைத்தார்.
அதன் பின்னர் இந்திராகாந்தி மைதானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசுகையில், ‘ கடந்த கால அரசு 20 நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளில் கிடைத்த வசதிகளை கூட இந்தியாவில் பல்வேறு இடங்களில் தரவில்லை. ஆனால், நமது அரசு 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டு தேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.
கடந்த கால சவால்களை தற்போது நிவர்த்தி செய்து வருகிறோம். இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்தகால அரசு மக்களுக்கு தேவையானதை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது. எல்லா வீடுகளுக்கும் கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்குவதை டபுள் எஞ்ஜின் பாஜக அரசு சாத்தியப்படுத்தியுள்ளது. ‘ என பிரதமர் மோடி நேற்றைய கூட்டத்தில் பேசினார்.