எனது குடும்பம் என்னை விட்டு விலகி இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்.! பிரதமர் மோடி பெருமிதம்.!

Default Image

நீண்ட வருடம் குஜராத்தின் முதல்வர் பொறுப்பில் நான் இருந்துளேன். அப்போது நான் குஜராத்திற்கு  செய்துள்ள சாதனைகளை எண்ணுவது மிக கடினம். – குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம். 

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாதில் மோடி கல்வி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், முதலாம் தி்ட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

அதன் பின்பு அங்கு பேசினார். அப்போது பேசுகையில், ‘ நீண்ட வருடம் குஜராத்தின் முதல்வர் பொறுப்பில் நான் இருந்துளேன். அப்போது நான் குஜராத்திற்கு  செய்துள்ள சாதனைகளை எண்ணுவது மிக கடினம். ‘ என குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் பேசுகையில், ‘ நீண்ட காலம் குஜராத் முதல்வராகவும் இரண்டாவது முறையாக பிரதமராகவும் நான் பதவியில் இருக்கிறேன். ஆனால், இந்த கால கட்டங்களில் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதுவரை என்னிடம் எந்தவிதமான உதவியையும் கேட்டதில்லை. எனது குடும்பத்தினர் என்னை விட்டு விலகி இருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே கூறுவேன்.’ என கூறினார்.

 மேலும், ‘ எனது தலைமையிலான அரசு கடைக்கோடியில் உள்ள கடைசி சாமானியனுக்கும் அதிகாரமளிக்கும் இலக்கை நோக்கி  வீறுநடைபோட்டு சென்று கொண்டிருக்கிறது.’ என பெருமையாக தனது உரையை ஆற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்