உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயர்வதற்கு இவர்கள் தான் காரணம்! பிரதமர் மோடி புகழாரம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார். நியூ யார்க்கில் உள்ள ஐநா சபையில் பல்வேறு நாட்டு தலைவர்கள் மத்தியில் தனது ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்கள், குறித்தும் வருங்கால திட்டங்கள் குறித்தும் உரை நிகழ்த்தினார்.
அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி நேற்று இந்தியா திரும்பினார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது எனவும், உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீதானஆர்வம் அதிகமாகி உள்ளது எனவும், இதற்கு காரணம் 130 கோடி இந்திய மக்கள் தான் எனவும் பெருமையாக கூறினார்.