ராஜதந்திர முறையை பிரதமர் மோடி பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சீனாவுடனான மோதல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, சீன ஊடுருவவில்லை என பிரதமர் கூறினார். இதனால், ராகுல்காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் சீன ஊடுருவவில்லை என பிரதமர் பேசியதாக வெளியான தகவலை சுட்டி காட்டி கேள்வி எழுப்பினர். அதில், சீனா ஊடுருவவில்லை என்றால் எங்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்..? ஏன் கொல்லப்பட்டனர்..? என,ராகுல்காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். இதனால் சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீனா ஊடுருவவில்லை இல்லை என்று தான் நரேந்திர மோடி பேசினார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் சீன அத்துமீறல் பற்றி பிரதமர் மோடி கூறியதை தவறாக திசை திருப்புகிறார்கள் என பிரதமர் அலுவலகம் விளக்கம் கொடுத்தது.
இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தின் விளக்கம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறுகையில்,இந்த விளக்கம் லடாக் பகுதியில் நிலவும் உண்மையின் தன்மையை குறைப்பதாக உள்ளது.ராஜதந்திர முறையை பிரதமர் மோடி பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…