லடாக் விவகாரத்தில் இந்த முறையை பிரதமர் மோடி பின்பற்ற வேண்டும் – காங்கிரஸ்

Default Image

ராஜதந்திர முறையை பிரதமர் மோடி பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

சீனாவுடனான மோதல் குறித்து  அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, சீன ஊடுருவவில்லை என பிரதமர் கூறினார். இதனால், ராகுல்காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் சீன ஊடுருவவில்லை என பிரதமர் பேசியதாக வெளியான தகவலை சுட்டி காட்டி கேள்வி எழுப்பினர். அதில், சீனா ஊடுருவவில்லை என்றால் எங்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்..? ஏன் கொல்லப்பட்டனர்..? என,ராகுல்காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். இதனால் சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீனா ஊடுருவவில்லை இல்லை என்று தான் நரேந்திர மோடி பேசினார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் சீன அத்துமீறல் பற்றி பிரதமர் மோடி கூறியதை தவறாக திசை திருப்புகிறார்கள் என பிரதமர் அலுவலகம்   விளக்கம் கொடுத்தது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தின் விளக்கம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறுகையில்,இந்த விளக்கம்   லடாக் பகுதியில் நிலவும் உண்மையின் தன்மையை குறைப்பதாக உள்ளது.ராஜதந்திர முறையை பிரதமர் மோடி பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது. நாட்டின் பாதுகாப்பை  உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்