பிரதமர் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும்,என்னால் மன்னிப்பு கேட்க முடியாது – ராகுல் உறுதி

Published by
Venu
  • ராகுல் காந்தி ரேப் இன் இந்தியா என்று கூறிய விவகாரத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  • மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் ராகுல் சவர்க்கர் அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகள் குறித்து ஜார்கண்டில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நாட்டின் பிரதமரான மோடி எங்கு போனாலும் மேக் இன் இந்தியா திட்டம் குறித்து பேசி வருகிறார்,ஆனால் நாட்டில் பல இடங்களில் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் அரங்கேறி ரேப் இன் இந்தியாவாக மாறி வருகிறது என்று பேசினார்.ராகுல் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதன் பின்பு செய்தியாளர்களிடம் ராகுல் பேசுகையில் ,என்னால் மன்னிப்பு கேட்க  முடியாது என்று தெரிவித்தார்.மேலும் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் வீடியோ ஒன்றை பதிவிட்டு ,இதற்கு எல்லாம்  மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதிவிட்டு,

  • வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் வன்முறைகள் தொடர்பாக
  • இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்ததற்காக
  • இவ்வாறு பேசியதற்காக என்று ராகுல்  பதிவிட்டார்.

ராகுல்  இவ்வாறு பேசியதற்காக என்ற கூறியதில் ஒரு விடியோவை பதிவிட்டார்.அந்த வீடியோவில் மோடி பேசுகையில்,டெல்லி நகரை பாலியல் தலைநகரம் ( ரேப் கேப்பிட்டல் ) என்று கூறிய வீடீயோவை வெளியிட்டார். பின்னர் ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில்  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி புகார் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று பாரதத்தை காப்போம் என்ற தலைப்பில் காங்கிரஸ் தலைமையிலான பேரணி தொடக்கப்பட்டது.அப்போது நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில்,  நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துவிட்டது என பேசியதற்காக மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்கள். நான் கேட்க மாட்டேன். மாறாக பாலியல் வன்கொடுமைகளை தடுக்கதாதற்காக பிரதமர் நரேந்திர மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் ராகுல் சவர்க்கர் அல்ல. நான் ராகுல் காந்தி. மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது.

நாட்டின் எல்லா நிதியும் அம்பானி மற்றும் அதானியின் பாக்கெட்டுக்கு செல்கிறது.மோடி என்ற தனி நபரால் இந்தியாவின் பொருளாதாரமே சரிந்துள்ளது.ஏழைகளின் பணத்தை திருடுகிறார் மோடி.நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம் என்று பேசினார்.

Recent Posts

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

39 minutes ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

1 hour ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

2 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

2 hours ago

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

3 hours ago

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…

4 hours ago