பிரதமர் மோடி கூறுவது பொய்யா? அல்லது ஞாபக மறதியா ?
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது 5 ஆண்டுகால ஆட்சியில், எங்குமே குண்டு வெடிப்புகள் நிகழவில்லை என தெரிவித்திருந்தார். மோடியின் இந்த கருத்துக் குறித்து ப.சிதம்பரம் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
ப.சிதம்பரம் அவர்கள் கூறுகையில், தனது 5 ஆண்டு ஆட்சியில் எங்குமே குண்டுவெடிப்பு நிகழவில்லை என மோடி கூறுவது பொய்யா? அல்லது ஞாபக மறதியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அவர் 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை எங்கெல்லாம் குண்டுவெடிப்புகள் நிகழ்த்ததோ, அதெல்லாவற்றையும் பட்டியலிட்டு, சுட்டிக்காட்டியுள்ளார்.