கூட்டத்தொடரில் விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.! – நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி.!
குளிர்கால கூட்டத்தொடரில் விவாதம் மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். – பிரதமர் மோடி.
இன்று முதல் இம்மாதம் 29ஆம் தேதி வரையில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
அதே போல , விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், விவாதங்களை முன்னெடுக்கவும் தயாராக உள்ளன. இதனால், இந்த கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது இந்த கூட்டத்தொடர் எந்தளவுக்கு முக்கியம் என்றால், இந்தியா சுதந்திரம் பெற்று 75வது வருடம் ஆகியுள்ள நிலையில் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஜி20 நாடுகளின் கூட்டமைப்பு தலைமை பொறுப்பு இந்த வருடம் இந்தியா வசம் வந்துள்ளது. ஆகவே இந்த கூட்டத்தொடர் முக்கியமானது. இந்த கூட்டத்தொடரில் விவாதம் மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார் பிரதமர் மோடி.