எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை – பிரதமர் மோடி பேச்சு

pm modi

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் அன்று கூட்டத்தொடர் தொடங்கியது. இதன்பின் மறுநாள் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது, இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு செங்கோலுடன் குடியரசு தலைவர் வந்தபோது, அவரது பின்னால் நாங்கள் அணிவகுத்து வந்தோம். கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதையே குடியரசு தலைவர் உரை பிரதிபலிக்கிறது.

இளைஞர், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய 4 சக்திகளை பற்றி பேசவுள்ளோம். எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் நீண்ட நாள் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பர் என எனக்கு தெளிவாகிறது. தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சிலர் தேர்தலில் போட்டியிடவே அஞ்சுகின்றனர். நாட்டுக்கு ஆரோக்கியமான எதிர்க்கட்சி தேவைப்படுகிறது.

மீண்டும் மோடி.! இது ஒரு வித்தியாசமான தேர்தல்… அண்ணாமலை பேட்டி.!

நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை நான் பாராட்டுகிறேன். எதிர்கட்சியாகிய உங்களுக்கு பொதுமக்கள் நிச்சயமாக ஆசீர்வாதங்களை வழங்குவார்கள். எதிர்க்கட்சிகளின் இன்றைய நிலைமைக்கு காங்கிரஸ் தான் காரணம் என்பது போல் கடுமையாக பிரதமர் விமர்சித்தார். நாட்டை பிளவுப்படுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்.

பிரிவுகளை பற்றி எவ்வளவு காலம் யோசிப்பீர்கள்? இன்னும் எத்தனை காலம்தான் சமூகத்தை பிளவுபடுத்திக் கொண்டிருப்பீர்கள்? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் பிரதமர் கூறியதாவது, இந்தியாவின் GDP 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. விரைவில் 3-வது இடத்திற்கு முன்னேறும். இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் கவனித்து கொண்டு இருக்கின்றன.

பாஜக 3-வது முறை ஆட்சி அமைக்கும் போது இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கும், இது மோடியின் உத்தரவாதம். ஜனநாயகத்துக்கு குடும்ப அரசியல் உகந்தது இல்லை. பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்து முடிக்க 100 ஆண்டுகள் தேவைப்படும். அதற்குள் ஐந்து தலைமுறைகள் கடந்திருக்கும் என்றும் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பது காங்கிரஸின் நோக்கமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்