உலகின் கல்வி மையமாக இந்தியாவை மாற்றுவதே எனது நோக்கம்.! பிரதமர் மோடி பேச்சு.!
பீகார்: இந்தியாவை கல்வி உலகின் மையமாக மாற்றுவதே எனது நோக்கம் என நாளந்தா பல்கலைக்கழக திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாளந்தா பல்கலைகழகத்தின் புதிய கட்டடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்று வரும் இந்த திறப்பு விழாவில் பிரதமர் மோடி, மாநில முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பன்னாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை உலக கல்வி மற்றும் அறிவின் மையமாக மாற்றுவதே எனது நோக்கம் என குறிப்பிட்டார். மேலும், இந்தியாவின் அடையாளத்தை மீண்டும் உலகின் தலைசிறந்ததாக அறிவு மையமாக உருவாக்குவதே எனது நோக்கம் என்றும் குறிப்பிட்டார். இன்று 1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் அடல் டிங்கரிங் ஆய்வகத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயின்று வருகின்றனர் என்றும் பிரதமர் மோடி பேசினார்.
உலக புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் கட்டியெழுப்புவது இந்தியாவின் பொற்காலத்தைத் தொடங்கப் போகிறது. நாளந்தாவின் மறுமலர்ச்சி இந்தியாவின் திறனை உலகுக்கு அறிமுகப்படுத்தும். 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற 10 நாட்களுக்குள் நாலந்தா பல்கலைக்கழத்தை திறக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாளந்தா என்பது வெறும் பெயரல்ல, அது ஒரு கல்வி அடையாளம், மரியாதை ஆகும். நெருப்பால் புத்தகங்களை எரிக்கலாம் ஆனால் அறிவை அழிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி நாளந்தா பல்கலைக்கழக திறப்பு விழாவில் பேசினார்.