கூட்டு முயற்சியின் மூலம் நமது ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.
பிரதமர் மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழகத்தின் நாக நதியை குறிப்பிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அதாவது, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ‘நாக நதி’ பல ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மக்களை ஒன்றிணைத்து கால்வாய்களை தோண்டி தடுப்பணைகளை உருவாக்கினர். இவர்கள் மேற்கொண்ட முயற்சியால் இன்று நாக நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதனால், நதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும் என தெரிவித்த பிரதமர், தமிழக சகோதரிகளின் முயற்சிகளை போன்று இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நதிகளை மீட்டெடுக்க பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர், பல்வேறு நாட்கள் கொண்டாடப்பட்டாலும் நாம் மிக முக்கியமாக கொண்டாட வேண்டிய தினம் ‘உலக நதி தினம்’. குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீர் பற்றாக்குறை உள்ளது. கூட்டு முயற்சியின் மூலம் நமது ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும். கங்கையை போற்றுவோம் திட்டம் இன்று வெற்றிகரமான திட்டமாக திகழ்கிறது என்றும் கூறினார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…