PM Modi - JP Nadda [File Image ]
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நேற்று 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது 3 மாநிலங்களிலும் காங்கிரசை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இருந்தாலும், கடந்த முறை ஒரே ஒரு தொகுதியை வென்று இருந்த பாஜக இந்த முறை தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்று வாக்கு சதவீதத்தையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3 மாநில தேர்தல் வெற்றியை பாராட்டும் விதமாக, நேற்று டெல்லியில் பாஜக அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டார். அதில் பேசிய பிரதமர் மோடி , தேசிய தலைவர் ஜேபி.நட்டாவை வெகுவாக பாராட்டினார்.
தெலுங்கானா தேர்தல் ஹைலைட்ஸ்… ஆட்சி கோரும் காங்கிரஸ்.! முன்னேறிய பாஜக.!
அவர் கூறுகையில், நீதி துறையிலும், அமைச்சராக பொறுப்பில் இருந்த போதும்ம், ஜேபி.நட்டா சிறப்பாக பங்காற்றி வந்தார். அதே போல ஒரு கட்சி தலைவராகவும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். தேர்தலுக்கு முன்பாக அவரது குடும்பத்தில் ஒரு துயரம் நிகழ்ந்தது. ஆனால் அதனை கூட பொருட்படுத்தாமல், அவர் கட்சிக்காக தொடர்ந்து பாடுபட்டார்.
இந்த வெற்றிகள் நமது தேசியத் தலைவர் நட்டா-ஜியின் அயராத உழைப்பால் கிடைத்தவை. அவர் நடைமுறைப்படுத்திய உத்திகள்தான் இன்றுவரை நம்மை வழிநடத்திச் சென்றுள்ளது. கட்சிக்காக முழு அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் செயல்பட்டு வருகிறார். இனியும் இந்த பணியை சிறப்பாக செய்யுங்கள் என்று பிரதமர் மோடி பாராட்டினார்.
இதனை அடுத்து பேசிய தேசிய தலைவர் ஜேபி.நட்டா, நாட்டில் தற்போது செயல்படுத்தப்படும் ஒரே உத்தரவாதம் என்றால் அது பிரதமர் மோடியின் உத்தரவாதம் மட்டுமே. பிரதமர் நரேந்திர மோடிஜியின் தலைமையில் நாங்கள் சரிவுகளில் இருந்த காலத்திலும், பல வெற்றிகளைப் பெற்ருள்ளோம். பிரதமர் மோடியை எங்களது அதிர்ஷ்டமாக கருதுகிறோம்.
மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றதற்கு அவருக்கு நாங்கள் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பாஜக தேர்தலில் போட்டியிட்ட போதெல்லாம், பிரதமர் மோடி எப்போதும் முன்னணியில் வந்து எங்களை வழிநடத்தினார். பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவது என எதுவாக இருந்தாலும், பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. மோடி எதையும் சாத்தியமாக்குவார் என மக்கள் நம்புகிறார்கள் என்பது தெளிவாகிறது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார்.
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…