ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி முதல், மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது, இதற்காக பிரதான முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது. ஆளும் பாஜக நேற்று முதல் பிரமாண்ட பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சி மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு பேசி வருகின்றனர். இந்நிலையில் வருகிற 25ஆம் தேதி பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பிரசாரத்திற்காக செல்ல உள்ளாராம்.
மேதினி நகர் மற்றும் கும்லா ஆகிய பகுதிகளில் நடக்கவுள்ள பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளாராம். அதனை அடுத்து முதல்கட்ட தேர்தல் 30-ஆம் தேதி முடிந்தவுடன், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் ஜம்தேஸ்பூரில் நடைபெற உள்ள பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…